Posts

Showing posts with the label Brain booster foods

ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்

Image
ஞாபக சக்தியை அதிகரிக்கும் சிறந்த உணவுகள் இன்றைய காலத்தில் நவீன தொழில்நுட்பங்கள் நிறைய வந்துள்ளன. அத்தகைய தொழில்நுட்பங்களை கையாள்வதற்கு பெரியோர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ சிறிய குழந்தைகளுக்கு நிறைய தெரியும். இவை அனைத்திற்கு அறிவுத்திறன் தான் காரணம். தற்போதுள்ள குழந்தைகள் அனைவரும் மிகுந்த புத்திக்கூர்மையுடன் இருக்கின்றனர். அவர்களிடம் எந்த ஒரு விஷயத்தை சொன்னாலும், அதை அவர்கள் மறக்காமல் ஞாபகத்துடன் வைத்திருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு கொடுக்கும் ஒவ்வொரு உணவையும் பெற்றோர்கள் பார்த்து ஆரோக்கியமானதாக கொடுக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கு எந்த ஒரு மனஅழுத்தமும் இல்லை. ஆனால் பெரியோர்களுக்கு வேலைப்பளுவின் காரணமாக மனதில் அழுத்தம் அதிகரித்து, அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எந்த ஒரு முக்கியமான வேலையை செய்ய நினைத்தாலும், அதனை உடனே மறந்துவிடுவர். இவை அனைத்திற்கும் சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவுகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிக்கலாம். மீன் ...